இயேசு உயிர்ப்பு நாளை முன்னிட்டு இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை பற்றிய தொகுப்பு
இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது ஏசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கருதுகின்றனர்.
ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கிறது. இந்த கல்லறை கிபி 70 ஆம் ஆண்டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. இயேசுநாதரின் ஆரம்பகால சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் புனித ஜெகோவா விழித்தெழு என்று கிரேக்க மொழியில் குறிப்பிட்டிருப்பதை ரிமோட் கண்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.