Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுண்டுவிரலில் எலும்பு முறிவு…. “ஐ” பட விக்ரம் போல மாறிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சுண்டுவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவிற்கு கொடுத்த மருந்தால் இளைஞர் ஐ பட விக்ரம் போல மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஸ்வஜித் மண்டல். இவர் பத்து வருடங்களாக மதுரையில் தன்னுடைய நண்பர்களோடு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அப்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் கட்டு போடவேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து மருந்துகளையும் எழுதிக் கொடுத்துள்ளனர். மருந்து எடுத்துக் கொண்ட ஒரு வாரத்திற்கு பின்னர் அவருடைய உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இந்த அலர்ஜியை தோல் மருத்துவரிடம் சென்று காண்பித்துள்ளார். ஆனாலும் மேலும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஐ படத்தின்  கதாநாயகன் போல உடல் முழுவதும் கருப்பாக காட்சி அளித்துள்ளது. தற்போது அந்த இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவருக்கு எந்த மாதிரியான மருந்துகள் கொடுக்கப்பட்டன, பக்க விளைவுகள் எதனால் ஏற்பட்டது? என்பது விவரம் தெரியாததால் மருத்துவர்கள் குழம்பியுள்ளனர். எலும்பு முறிவுக்கு மருந்து கொடுத்ததின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விஸ்வஜித் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |