பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசிய வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அதிபரான இமானுவேல் மேக்ரான் லயான் நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியானது பிரான்ஸ் நாட்டின் உணவு முறையை ஊக்குவிக்கும் வண்ணமாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கூட்டத்திலுள்ள ஒரு வாலிபர் “புரட்சி வாழ்க” என்று முழக்கமிட்டுள்ளார்.
பின்னர் திடீரென அந்த வாலிபர் அதிபர் மேக்ரான் மீது முட்டையை வீசியுள்ளார். ஆனால் அந்த முட்டை அதிபரின் தோளில் பட்டு உடையாமல் கீழே விழுந்துள்ளது. இதனால் அங்கு சிறுது நேரம் பதற்றம் நீடித்துள்ளது. பின்னர் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு 19 வயது என தெரிய வந்துள்ளது. மேலும் பரிசோதனையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.