Categories
உலக செய்திகள்

பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் அத்துமீறும் பிரான்ஸ்.. வெளியான வீடியோ..!!

பிரிட்டன் அரசிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பின்பும், பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு படையினர் புலம்பெயரும் மக்களை நாட்டிற்குள் விட்டுச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசு தங்கள் நாட்டிற்குள் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சட்டவிரோதமாக வருவதை தடுக்க அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினருக்கு 54 பில்லியன் பவுண்டுகள் கொடுத்திருக்கிறது. அதன் பின்பும் பிரான்ஸின் கடற்படையினர் புலம்பெயர்ந்த மக்களை பிரிட்டன் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டுச்செல்வதாக தெரிய வந்துள்ளது.

பிரபல பத்திரிக்கை நிறுவனம், இக்காட்சியை வீடியோ எடுத்திருக்கிறது. அதில், ஒரு பத்திரிகையாளர், பிரான்ஸ் கடற்படையின் கப்பல் ஒன்று புலம்பெயர்ந்த மக்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகில் பிரிட்டனுக்கு வருவதாக கூறுகிறார்.

கப்பல்களை கண்காணிக்கும் ஒரு இணையதளம், இன்று காலையில் பிரிட்டன் எல்லை பாதுகாப்புப்படைக்குரிய சிறிய படகுகள், புலம்பெயர்ந்த மக்களை ஏற்றி பிரிட்டன் அழைத்து வர பிரான்சின் கடல் எல்லைக்க்கு பக்கத்தில் சென்றுகொண்டிருப்பதை காட்டுகிறது.

பிரான்ஸ் அரசு 54 மில்லியன் பவுண்டுகள் வாங்கிக் கொள்வதற்கு மட்டும் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டது. ஆனால் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டுபவர்களை தடுக்கவில்லை என்று முன்னாள் எல்லை பாதுகாப்புபடையின் இயக்குநர் ஜெனரல்  Tony Smith கூறியிருக்கிறார்.

Categories

Tech |