Categories
உலக செய்திகள்

கொரோனா பாஸ்போர்ட் அவசியம்…. உணவக உரிமையாளர்கள் மறுப்பு…. விதிமுறைகளை அமல்படுத்திய பிரான்ஸ் அதிபர்….!!

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் அம்பர் பிளஸ் பட்டியிலில் இருந்து பிரான்ஸ் நாடு நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதனால் பிரித்தானியா பயணிகள் அனைவரும் பிரான்சுக்கு செல்லும் ஆவலில் உள்ளனர். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இன்று முதல் கொரோனா பாஸ்போர்ட் விதிமுறைகளை புதிதாக அமல்படுத்தியுள்ளார். இதன் படி பிரான்சுக்கு சுற்றுலா செல்வோர், உணவருந்த செல்வோர் மற்றும் வேறு பகுதிகளுக்குச் செல்பவர்கள் அனைவரும்  தாங்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றை அளிக்க வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தியதற்கு ஆதாரமாக மக்கள் பிரித்தானியா  சுகாதாரத்துறை வழங்கியுள்ள QR கோட்டை பிரான்ஸ் கொரோனா வைரஸ் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆனால் 20% பிரித்தானியர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்னும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் QR கோட்டை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு சான்றாக அளிக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில் பிரான்ஸ் எல்லையில் மட்டும் பிரித்தானியா சுகாதாரத் துறை அளித்துள்ள கடிதத்தை ஆதாரமாகக் காண்பிக்க முடியும். இருப்பினும் உணவகங்கள்,சுற்றுலாத் தலங்களில் இதனை சான்றாக காட்ட முடியாது. இந்த நிலையில் பிரெஞ்சு உணவக உரிமையாளர்கள் இந்த விதிகளை மீற போவதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல நாட்கள் கடைகள் மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு இப்பொழுது தான் வருவாய்க்கான வழி பிறந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். இது குறித்து பிரெஞ்சு உணவக உரிமையாளர் ஒருவர் கூறியதில் “நான் பிரித்தானியா சுற்றுலா பயணிகளிடம் கொரனோ பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்க மாட்டேன். இதனால் எனக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தாலும் பரவயில்லை. நான் இதற்காகவே 450,000 யூரோக்களை தனியாக எடுத்து வைத்துள்ளேன். மேலும் விதிமுறைகளை மீறியதற்காக என்னை சிறைக்கு அனுப்பினாலும் எனது பெட்டி படுக்கைகளுடன் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |