அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை துண்டிப்பது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ‘அக்கஸ்’ என்ற புதிய அமைப்பை சீனாவை அடக்குவதற்காக தொடங்கியுள்ளது. இந்த அமைப்பின் பெயரானது மூன்று நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துக்களை தவிர்த்து பின்னர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் இந்த மூன்று நாடுகளும் இணைந்து இந்தோ-பசிபிக் புதிய முத்தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஓன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் டீசல் தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்துடன் அமெரிக்கா இணைந்து புதிய அமைப்பை தொடங்கிய நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து பிரான்ஸ் கூறியதாவது “ஆஸ்திரேலியா எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை துண்டிப்பது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் தங்களது தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துள்ளது.