பிரான்ஸ் அரசு, எல்லை மீறி வந்த பிரிட்டன் கடற்படையின் இழுவை கப்பலை பிடித்து வைத்திருக்கிறது.
பிரான்ஸ் அரசு, ஏற்கனவே அடுத்த மாதம் 2 ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் இழுவை கப்பலை பிடித்து வைத்திருக்கிறது.
அதாவது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது. அப்போதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளுடன் உள்ள பொது போக்குவரத்து, வணிகம், பிற நாட்டவர்களுக்கு வேலை கொடுப்பது மற்றும் எல்லை விவகாரம் போன்ற பல பிரச்சனைகளை பிரிட்டன் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் அரசின் கடற்படை, பிரிட்டன் நாட்டின் இழுவை கப்பல், தங்களின் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி அக்கப்பலை பிடித்து வைத்திருக்கிறது. பிரான்சின் இந்த நடவடிக்கையால் பிரிட்டன் நாட்டின் அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.