பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை முட்டையால் அடிக்க முயற்சி செய்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள லியோனில் (Lyon) சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சியானது திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் சென்றிருந்தார். அப்பொழுது கூட்டத்தின் நடுவே அவர் சென்று கொண்டிருந்த போது அவரது தோள்பட்டை மற்றும் முகத்திற்கு நடுவே ஒரு முட்டை வந்து வேகமாக உரசி சென்றது.
நல்லவேளையாக முட்டையானது உடைந்து அவர் மேல் படவில்லை. மேலும் இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை, அவரது காவலர்கள் சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் முட்டையை ஜனாதிபதியின் மீது விசியவரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவமானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
French President Emmanuel Macron was hit with an egg while he was visiting Lyon to promote French gastronomy https://t.co/KGg8devbjn pic.twitter.com/cLUDhfXl64
— Reuters (@Reuters) September 27, 2021