பிரான்ஸ் ஜனாதிபதியின் தனிப்பட்ட புகைப்படம் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சட்டப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறிரயதவது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோக பூர்வமான இல்லமான எலிசா அரண்மனைக்கு அருகில் உள்ள கண் காட்சியகத்தில் “பிரான்சு அதிபர்களும் அவர்களது விடுமுறை இடங்களும்” என்ற தலைப்பில் ஒரு புகைப்பட தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கண்காட்சியில் ஜனாதிபதி மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் குளியல் உடையில் ஜெட்- ஸ்கை எனப்படும் விரைவு படகோட்டம் செய்வதை காட்டும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து ஜனாதிபதி மேக்ரோன் தனது தனியுரிமையை பொருட்படுத்தாமல் இவ்வாறு படமெடுத்து காட்சிக்கு வைத்ததாக புகார் அளித்துள்ளார்.