பிரான்ஸ் – ஜெர்மனி இடையே உள்ள எல்லையை கடந்து செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற முடிவை ஆதாரமாக வைத்திருக்க வேண்டும்.
தினமும் Moselle-விலிருந்து 16 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்து செல்லும் எல்லைப்பகுதியில் பயண கட்டுப்பாடுகளை குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில் பிரான்சின் Moselle மாகாணத்திற்கும்- ஜெர்மனிக்கும் இடையிலுள்ள எல்லையை தாண்டி பயணம் செய்யும் பொதுமக்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனோ இல்லை என்ற சோதனை முடிவை ஆதாரமாக அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கமும் ஜெர்மனி அரசாங்கமும் முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை ஐரோப்பா அமைச்சர் Clement Beaune கூறியுள்ளார்.நாங்கள் ஜெர்மனியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ஜெர்மன் அரசாங்கம் எல்லையை கடக்க அனுமதி வழங்கியது என்று Clement Beaune தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்காவில் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜெர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனம் பிரான்சின் Moselle மாகாணத்தை கொரோனா அதிகமுள்ள பகுதியாக குறிப்பிட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் Moselle-லிருந்து பயணம் செய்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. மேலும் அங்கிருந்து கார் மூலம் ஜெர்மனிக்கு வரும் பயணிகள் கொரோனா இல்லை என்ற அந்த சோதனை முடிவை கட்டாயம் எங்களிடம் காட்டவேண்டும் என்று ஜெர்மன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.