Categories
உலக செய்திகள்

எரிபொருள் தேவைக்காக… ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்த பிரான்ஸ்….!!!

பிரான்ஸ் அரசு எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் TotalEnergies என்னும் நிறுவனமும் ஐக்கிய அரபு அமீரகத்தினுடைய ADNOC என்ற எண்ணைய் நிறுவனமும் நேற்று முன்தினம் ஆற்றல் குறித்த ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஐக்கிய அரபு அமீரகத்தினுடைய அதிபர் Sheikh Mohamed bin Zayed Al-Nahyan பாரிஸ் சென்றிருந்தார்.

அப்போது இரண்டு நாடுகளுக்கு இடையே இந்த முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே, ஆற்றலுக்குரிய மாற்று ஏற்பாடுகளை தேடி வரும் இம்மானுவேல் மேக்ரோன்  முயற்சி மேற்கொள்வது, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே நெருங்கிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளன.

Categories

Tech |