பிரான்ஸ் நாட்டு பெண்கள், சூரியக்குளியல் எடுக்கும்போது மேலாடையின்றி இருப்பது, குறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாடு முத்தம் மற்றும் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் எடுப்பதில் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதாவது, 1960-ஆம் காலகட்டத்தில் பெண்களுக்கான உரிமையின் அடையாளமாக மேலாடை இல்லாமல் சூரிய குளியல் எடுப்பது தொடங்கியிருக்கிறது. அதன் பின்பு அதனை பாரம்பரியமாக, அந்நாட்டு பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேலாடை இல்லாமல் சூரிய குளியலில் இருந்த பெண்கள் இருவரை காவல்துறையினர் அணுகி ஆடை அணியுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இது நாட்டில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நாட்டின் உள்துறை அமைச்சர், Gerald Darmanin அந்த காவல்துறையினர், தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.
இந்த பிரச்சனைகளுக்கு பிறகு, தற்போது மேலாடைகள் இல்லாமல் சூரியக்குளியல் எடுப்பது குறைந்திருக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதில் 50% பிரான்ஸ் பெண்கள், ஆண்களால் பிரச்சனை ஏற்படலாம் என்ற பயத்தில், சூரியக்குளியலில் நீச்சல் உடை அணிவதாக கூறியுள்ளார்கள். 1984-ஆம் வருடத்தில் 40% பெண்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுத்துள்ளனர். இது, 2009-ஆம் வருடத்தில் 34% ஆகவும், தற்போது 19% ஆகவும் குறைந்துள்ளது.