Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை நிகழ்த்திய நாடு!”.. தனிமைப்படுத்துதல் பட்டியலில் உள்ள நாடுகள்..!!

பிரான்ஸ் நேற்று தனிமைப்படுத்துதல் பட்டியலில் மேலும் 4 நாடுகளை இணைத்ததோடு  தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது. 

பிரான்ஸ் அரசு, இந்தியா, சிலி, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மக்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவர் என்று கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி அன்று இலங்கை, கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், துருக்கி, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் இந்த தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்தது.

இந்நிலையில் பஹ்ரைன், கோஸ்டா ரிகா, உருகுவே மற்றும் கொலம்பியா போன்ற 4 நாடுகளையும் நேற்று இந்த பட்டியலில் இணைத்திருக்கிறது. மேலும் பிரான்ஸ் நேற்று ஒரே நாளில் சுமார் 6 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சரான, Olivier Véran கூறியுள்ளதாவது, இன்று பிரான்சில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 20 மில்லியன் ஆகிவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |