Categories
உலக செய்திகள்

மர்மங்கள் நிறைந்த 14ம் நூற்றாண்டின் கல் சவப்பெட்டி… ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்….!!!

பிரான்சில் இருக்கும் நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டின் ஒரு கல் சவப்பெட்டியை திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இருக்கும் நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் தீ விபத்து உண்டான பின் அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த பேராலயத்தின் அடிப்பகுதியிலிருந்து 14-ஆம் நூற்றாண்டின் கல் சவப்பெட்டியும், 19-ஆம் நூற்றாண்டின் வெப்பமூட்டும் அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், அந்த கல் சவப்பெட்டியானது, 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது தானா? அல்லது அதற்கும் முந்தைய காலத்தில் உள்ளதா? என்பது தெரியவில்லை. எனினும் அது நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆய்வாளர்கள் அந்தக்கல் சவப்பெட்டியை திறக்கக் கூடாது, அது தேவையற்ற விளைவுகளை உண்டாக்கும் என்று மக்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வாறு மர்மம் நிறைந்ததாக உள்ள அந்த சவப்பெட்டியை திறந்தால் வரும் ஆண்டுகளில் அதிக சிரமத்தை அனுபவிக்கவேண்டியது வரும் என்று பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனினும் இது பற்றி பிரான்சின் தேசிய தடுப்பு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் குழு தெரிவித்திருப்பதாவது, 14ஆம் நூற்றாண்டில் உள்ள இந்த சவப்பெட்டியை கண்டெடுத்த சில காலங்களிலேயே எண்டோஸ்கோபிக் கேமரா மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது. அந்த கேமரா மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் மதபோதகர் அதில் புதைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |