பிரான்ஸில் செவிலியர்கள் தங்களின் நிபந்தனைகள் மறுக்கப்பட்டுள்ளது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர்கள் கொரோனா காலக்கட்டத்தில் சமூக சிந்தனை மற்றும் பொறுப்புடன் செயல்பட்ட தங்களுக்கு சரியான ஊதியம் மற்றும் நிபந்தனைகள் மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய சிஜிடி தொழிற்சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கொரோனா நோயாளிகளின் படுக்கைகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செவிலியர்கள் மக்களின் உயிரை காக்கும் பணியில் தடையை ஏற்படுத்தாமல் பகுதிநேர வாரியாக வேலை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.