பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரதம மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஐரோப்பா முழுவதும் கொரோனோவின் நான்காம் அலை பரவி வரும் நிலையில், பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று, பிரான்ஸ் நாட்டின் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், பெல்ஜியம் நாட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அதன் பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பிரதமர் அடுத்த பத்து தினங்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. எனவே, பெல்ஜியத்தின் பிரதமருக்கு இன்று பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் மாநில செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார். மேலும், சோதனை முடிவு வரும்வரை பிரதமர் சுய தனிமைப்படுத்துதலில் இருப்பார் என்று டி குரூவின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.