பிரான்சில் எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு, இழப்பீடு, 200 யூரோக்கள் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென், தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிசக்தியின் விலை அதிகரிப்பை சமாளிக்க, ஒவ்வொரு மாதமும் 2,000 யூரோக்கள் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெரும் அனைத்து குடிமகனுக்கும் 100 யூரோ அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, மோட்டார் சைக்கிளும், காரும் ஓட்டாதவர்களையும் சேர்த்து சுமார் 34 மில்லியன் மக்களுக்கு பணவீக்க உதவிக்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸின் ஜனாதிபதி வேட்பாளரான Marine Le Pen, இத்திட்டம் தொடர்பில் கூறியிருப்பதாவது, வரியை மக்களிடமிருந்து வாங்குகிறோம்.
ஆனால், அவர்களது வரிப்பணத்தில், அவர்களுக்கு குறைவான தொகையை வழங்குவது நன்றாக இருக்காது. எனவே, தற்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் இந்த இழப்பீட்டை இரண்டு மடங்காக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, 200 யூரோக்கள் வழங்குமாறு அவரு கூறியிருக்கிறார்.