பிரான்ஸ் நாட்டு மக்களிடம், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மதிப்பு குறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான், உலகில் பிரபலமான தலைவர்களில் ஒருவர். இந்நிலையில் மக்கள் மத்தியில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிட்டால் ஜனாதிபதிக்கு மூன்று புள்ளிகள் மற்றும் பிரதமருக்கு 4 புள்ளிகள் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
தற்போது ஜனாதிபதி இம்மானுவேலின் செல்வாக்கு, 38 புள்ளிகள் இருக்கிறது. பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸ் மக்களிடம் 36 புள்ளியில் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், மக்களுக்கு ஜனாதிபதியின் நடவடிக்கைகள் 59% திருப்தியை கொடுத்திருக்கிறது. பிரதமரின் நடவடிக்கைகள் 58% திருப்தியைக் கொடுத்திருக்கிறது.