அமெரிக்காவில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளருக்கு ஆதரவாக இருப்போம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்திருக்கிறார்.
இந்திய நாட்டின் மும்பை மாநிலத்தில் பிறந்த சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளர் பிரிட்டன் அமெரிக்கராவார். இவர் 1988 ஆம் வருடத்தில் எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்னும் நாவல் முஸ்லிம் மதத்தை புண்படுத்துவதாக கூறி உலக நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் உரையாற்றி கொண்டிருந்த போது அவரை, Hadi Matar என்ற 24 வயது இளைஞர் திடீரென்று கத்தியால் தாக்கினார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இந்த சம்பவம் உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோன், இது குறித்து தெரிவித்திருப்பதாவது, சுமார் 33 வருடங்களாக சல்மான் ருஷ்டி சுதந்திரத்தினுடைய வெளிப்பாடாக இருந்து கொண்டிருக்கிறார்.
அறிவு பரப்பப்படுவதை எதிர்ப்பவர்களுக்கு எதிராக குரல்கொடுப்பவர். அவரின் போராட்டம் இந்த உலகம் முழுமைக்குமானது. முன்பை விட தற்போது அவருக்கு அதிக ஆதரவை தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.