அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர தேவியின் சிலையை பிரான்ஸ் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வரும் ஜூலை 4-ம் தேதி அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. எனவே பிரான்ஸ் தங்கள் நட்பு நாட்டிற்கு சுதந்திர தேவியின் சிலையை பரிசாக அளிக்கவிருக்கிறது. அதாவது வெண்கலத்தில் ஏறக்குறைய 3 மீட்டர் உயரத்தில் இந்த சிலை இருக்கிறது.
இச்சிலையானது, லு ஹவ்ரேவ் என்ற பிரெஞ்சு துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக இம்மாதத்தின் கடைசியில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒன்பது நாட்கள் பயணித்து, அமெரிக்காவின் மேரிலாண்டில் இருக்கும் பால்டிமோர் என்ற நகருக்கு அனுப்பப்படவுள்ளது.
அதன் பின்பு ஜூலை 4 ஆம் தேதி அன்று, எல்லிஸ் தீவில் சுதந்திர தினத்திற்காக வைக்கப்படவுள்ளது. இச்சிலையானது “மினி-லேடி லிபர்ட்டி” என்று அழைக்கப்படுகிறது. மேலும் நியூயார்க்கின் துறைமுகத்தில், தஞ்சமடைந்துள்ள புலம்பெயர்ந்தவர்களை, தங்கள் நாட்டிற்குள் வரவேற்கும் நோக்கில் இச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது பிரான்சும் இந்த பரிசை அனுப்பியிருப்பதால், தற்போது பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் நட்பிற்கான சின்னமாக இந்த சிலை அமைந்துவிட்டது.