பிரான்ஸில் ஆகஸ்ட் மாதம் முதல் ரயில் பயணம் செய்பவர்கள் சுகாதார அனுமதி சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமான ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே டெல்டா வைரஸ் பரவல் காணப்படுவதால் தடுப்பூசியின் மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் ரயில்வே நிர்வாகம் SNCF அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தொலைதூரம் இரயிலில் பயணிப்பவர்கள் கட்டாயம் சுகாதார அனுமதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயல் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இதற்கு ஏராளமான கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பயணச்சீட்டு பதிவின்போது தகவல்களை தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளது. இதை மீறினால் பயண தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.