Categories
உலக செய்திகள்

“ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை!”….. பிரான்ஸ் அரசு உறுதி….!!

பிரான்ஸ் அரசு, ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருப்பதால், அங்கு பதற்றம்  நிலவுகிறது. எனவே பல நாடுகளும், உக்ரைன் நாட்டை கைப்பற்றினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான Florence Parly தெரிவித்துள்ளதாவது, ரஷ்ய நாட்டின் மீது முன்பே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரச்சினைகள் மேலும் அதிகமாகும் பட்சத்தில், அந்த தடைகள் கடுமையானதாக  மாற்றப்படும். மேலும் அனைத்து நாடுகளும் ரஷ்யாவை அரசியல் ரீதியாக தனிமையாக்கும். அதே நேரத்தில் ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப பிரான்ஸ் நாட்டிற்கு விருப்பமில்லை என்று Florence உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நிலவும் பதற்றத்தை குறைக்க இரண்டு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |