உயிரியல் பூங்காவில் வெள்ளை காண்டாமிருகம் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வடக்கில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் இன்று அழகான குட்டி வெள்ளை காண்டாமிருகம் பிறந்துள்ளது. மேலும் இந்த குட்டி வெள்ளை காண்டாமிருகமானது பிறந்த ஒன்றரை மணி நேரத்திலேயே நடக்கத் துவங்கியுள்ளது. இதற்கு மொசுல் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
குறிப்பாக தற்பொழுது வெள்ளை காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஜிம்பாப்வே, கென்யா உள்ளிட்ட மற்ற ஆப்பிரிக்கா நாடுகளிலும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையானது 18,000 திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.