Categories
உலக செய்திகள்

இதையெல்லாம் பயன்படுத்த கூடாது..! பிரான்ஸ் நீதிமன்றம் மறுப்பு… பிரபல நாட்டில் தொடரும் தலைவலி..!!

பிரித்தானியாவிற்கு பிரான்ஸிலிருந்து வரும் புலம்பெயர்வோர்களுடைய படகுகளை திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் வழியாக நுழையும் புலம்பெயர்வோர் படகுகளால் பெரும் தலைவலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பிரித்தானியா இதனை சமாளிக்க புலம்பெயர்வோருடைய படகுகளை தடுத்து நிறுத்தி பிரித்தானிய கடல் எல்லைக்கு மீண்டும் திருப்பி அனுப்ப முடிவு செய்தது. ஆனால் பிரான்ஸ் அந்த திட்டத்தினை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

எனவே பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மீதமுள்ள மாதங்களிலும் அதிகரித்த வண்ணமே இருக்கும் என்று பிரித்தானிய அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் பிரித்தானிய உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் பிரித்தானியாவில் பிரான்சிலிருந்து நுழையும் புலம்பெயர்வோரை கண்காணிப்பதற்காக ட்ரோன்கள் பயன்படுத்தவும் மற்றும் காவல் துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பிரான்சுடன் 54 மில்லியன் பவுண்டுகள் வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தார்.

ஆனால் ட்ரோன்கள் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் நீதிமன்றம் தடை விதித்ததால் பிரித்தானியா திட்டமானது தடைபட்டது. இப்போது பிரித்தானியாவின் புதிய திட்டத்தையும் பிரான்ஸ் மறுத்துவிட்டதால் பிரித்தானியாவில் புலம்பெயர்வோர் பிரச்சனை தீராத தலைவலியாகவே இருக்கும் என்றே கூறப்படுகிறது.

Categories

Tech |