பிரான்சில் குறிப்பிட்ட சில இடங்களில் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் Olivier Veran அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிரான்சில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பிரான்ஸ் அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அங்குள்ள நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சர் Olivier Veran, Dunkerque நகரில் இந்த வாரதின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அங்கு சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” பிரான்சில் சுகாதாரத்தின் நிலைமை மிகவும் மோசம் அடைந்து விட்டது. Dunkerque-வில் வெள்ளிக்கிழமை மற்றும் முதல் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். இருப்பினும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகள் திறந்திருக்கும் ” என்று கூறினார்.