Categories
உலக செய்திகள்

இரவு நேர ஊரடங்கு… எப்போது முடிவடையும்…? பிரான்ஸ் ஜனாதிபதி பதில்…!!

பிரான்சில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பதற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதில் அளித்துள்ளார்.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதே வகை வைரஸ் பிரான்சிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது . அதனால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பிரான்சில் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த ஊரடங்கிற்கு தளர்வு உண்டா? என்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த இரவு நேர ஊரடங்கு 4 வாரங்கள் அல்லது 6 வாரங்கள் வரை  கட்டாயம் நீடிக்கும் என்று கூறினார். பிரான்சில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிடும் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.

Categories

Tech |