பிரான்சில் மருத்துவத் துறையினர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பிற்காக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனை அடுத்து ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட பீட்டா வகை வைரஸானது பிரான்சில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 15 ஆம் தேதிக்குள் மருத்துவத் துறையில் இருக்கும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அவர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் வேலை செய்ய அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் Marseille மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவத்துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் Sud Santé மற்றும் CGT unions என்ற தொழிற்சங்கங்களை சேர்ந்த 1,30,000 ஊழியர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர். அதிலும் குறிப்பாக வரும் 5 ஆம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.