தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பரில் உணவகங்கள், மதுபான விடுதிகள், கச்சேரி அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல பொது இடங்களில் ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தற்போது தாக்குதல் நடத்தியவர் என்ற சந்தேகத்தில் Salah Abdeslam என்ற 31 வயதான வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏனெனில் தாக்குதல் நடந்த போது அவர் கையில் வைத்திருந்த குண்டு வெடிக்காததால் தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து அவரை போலீசார் நான்கு மாதங்களுக்கு முன்பு பிரெஸ்லஸில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவரை இன்று le de la Cité பகுதியில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். இது குறித்து உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் என்று தெரிய வந்துள்ளது. அதிலும் தாக்குதல் நடத்தியவர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி, கார் போன்ற உதவிகளை வழங்கியதாகவும், தாக்குதல்கள் நடத்த ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும் ஈராக் மற்றும் சிரியாவில் பிரான்ஸ் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தற்கொலைப்படை தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று விசாரணையில் Salah Abdeslam ‘நான் ஒரு ஐ.எஸ். தீவிரவாதி’ என்று மட்டுமே கூறியுள்ளார். இதனால் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தாக்குதலில் பாதிப்படைந்தவர்களிடம் வரும் 28 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொள்ளப்படும்.
இதனை தொடர்ந்து குற்றவாளிகள் என்று சந்தேகப்படும் அனைவரிடமும் வரும் நவம்பரில் இருந்து விசாரணை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் சுமார் 8 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த வழக்கில் அடுத்த ஆண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்சில் இது மிகப்பெரிய வரலாற்று வழக்காக பார்க்கப்படுகிறது. மேலும் வழக்கானது பல மாதங்களாக நடைபெற்று வருவதால் அந்த நீதிமன்றத்தை சுற்றி சுமார் ஆயிரத்திற்கும் மேலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.