பிரான்ஸ் அதிபரின் சுகாதார பாஸ்போர்ட்க்கான QR குறியீட்டை பயன்படுத்திய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சில் மார்செயில் என்னும் 20 வயது வாலிபர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை Sainte-Marguerite என்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரிடம் சுகாதார பாஸ்போர்ட் உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பாஸ்போர்ட் என்னிடம் இல்லை ஆனால் அதற்கான QR குறியீடு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவரின் QR குறியீடை பரிசோதனை செய்து பார்த்ததில் அது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் சுகாதார பாஸ்போர்ட்க்கான குறியீடு என்று தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.மேலும் அவர் “நான் இதனை விளையாட்டாக செய்தேன்” என்று கூறியுள்ளார். அதிலும் அதிபர் இமானுமேல் மேக்ரோனின் சுகாதார பாஸ்போர்ட்க்கான QR குறியீடானது சமூக வலைதளத்தில் கசிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது போன்றதொரு சம்பவத்தில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் சுகாதார பாஸ்போர்ட் அவசியம்.