வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது செங்கல்களுக்கு இடையிலிருந்து தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு புதையல் பெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மேற்கே பிரான்ஸ் அமைந்துள்ளது. அங்கு Francois Mion என்பவர் ஒரு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தற்போது Francois Mion அவர் வாழும் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த புதுபிக்கும் பணியின்போது வேலை ஆட்கள் வீட்டின் செங்கல்களுக்கு இடையிலிருந்து ஒரு உலக பெட்டியை எடுத்துள்ளனர். அந்தப் பெட்டியை திறந்து பார்க்கும்போது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதிலிருந்து சில நாட்கள் கழித்து அந்த வீட்டின் மற்றொரு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பைக்குள் சில தங்க நாணயங்கள் கிடைத்துள்ளது. இப்போது அவர்களிடம் மொத்தம் 239 தங்க நாணயங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தங்க நாணயங்களை அவர்கள் ஏலம் விட முடிவு செய்துள்ளார்கள். அதாவது அந்த 239 தங்க நாணயங்களும் 250,000 முதல் 300,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கின்றனர். இதனைத்தொடர்ந்து ஏலத்தில் கிடைக்கும் தொகையை வீட்டின் உரிமையாளர்களும் பணியாட்களும் தங்களுக்குள் சமமாக பங்கிட்டுக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். இதனையடுத்து பிரான்ஸ் நாட்டில் இதுபோல் கிடைக்கும் புதையல்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு தான் சொந்தமாகும் என்னும் சட்டம் உள்ளது. ஆனால் கடந்த 2016 க்கு பின் வாங்கப்பட்ட நிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புதையல்களுக்குதான் இந்த சட்டம் சாத்தியமாகும். தற்போது இந்த வீட்டை பொருத்தவரை 2016லேயே வாங்கப்பட்டதால் இந்த புதையலை அவர்களே எடுத்துக்கொள்ளலாம்.