இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரான்சிலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் உள்ள மக்கள் வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் சான்றளித்த பைசர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனெகா மற்றும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தடுப்பூசிகளை மட்டுமே பிரான்ஸ் அரசு அங்கீகரித்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் அனுமதித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி அனுமதித்த 14வது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக பிரான்ஸ் உள்ளது. இந்த முடிவானது கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரித்தானியா மற்றும் கனடா மக்களுக்கு மன நிம்மதியை அளிக்கும்.
மேலும் இரண்டு ஷாட் தடுப்பூசிகளான ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா போன்றவற்றில் இரண்டு தவணை செலுத்தியவர்களை 14 நாட்களுக்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தற்போது 7 நாட்களே போதுமானதாக கருதப்படுகிறது. இதனை அடுத்து பிரான்ஸ் தவிர இந்தியாவில் தயாரிக்கப்பட்டகோவிஷீல்டு தடுப்பூசியை 15 நாடுகள்,13 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் 2 ஷெங்கன் பகுதி நாடுகள் அங்கீகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.