Categories
உலக செய்திகள்

‘எங்க ஏரியா உள்ள வராத’…. போர் விமானங்களை விரட்டியடித்த ஜெட்கள்….!!

அத்துமீறி நுழைய முயற்சி செய்த போர் விமானங்களை ரஷ்யா நாட்டின் ஜெட்கள் விரட்டியடித்துள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போர் விமானங்களை விரட்டியடித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவந்த செய்தியில் “கருங்கடல் வழியாக ரஷ்யாவின் வான் எல்லையில் பிரான்ஸ் நாட்டின் ரபேல் மற்றும் மிராஜ் வகையைச் சேர்ந்த போர் விமானங்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தன.

இதனால் அவற்றை ரஷ்யாவின் SU-27 ரக ஜெட் விமானங்கள் வழிமறித்து திருப்பி அனுப்பின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச வான் எல்லையில் கண்காணிப்பு பணியில் போர் விமானங்கள் ஈடுப்பட்டிருந்தன என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |