Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

OTP வரல….. ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த…. 6 பேரிடம் ரூ2,50,000 நூதன கொள்ளை….!!

தஞ்சையில் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இரண்டரை லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்து வரும் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வந்த  ஆயூப் என்பவர் ஊரடங்கு காரணமாக கப்பலில் ஏதும் பணி இல்லாததால், தனது சொந்த மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 4 தவணையாக ரூபாய் 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணக்கு ஓபன் செய்த வங்கியில் சென்று புகார் அளித்துள்ளார்.

ஆனால் அங்கே சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் தனது ஏடிஎம் கார்டு செயல்பாட்டை வங்கியில் எழுதிக்கொடுத்து கார்டை பிளாக் செய்துள்ளார். இவரைப்போலவே ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், பொதுப்பணித்துறை திட்ட அதிகாரி, வடிவமைப்பு கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் உட்பட ஆறு பேரின் வங்கிக் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ரூபாய் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமாக மோசடி நடைபெற்றுள்ளது.

இவர்கள் 6 பேரும் தேசியமயமாக்கப்பட்ட ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் இது போன்ற பண மோசடி நடக்கிறது என்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு OTP   பின்னும் ஒன் டைம் பாஸ்வேர்டு வரும். ஆனால் அது கூட தற்போது வராமல் மர்ம கும்பல் பணத்தை மோசடி செய்துள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் ஆபத்தை  குறிக்கிறது. தற்போது பணமோசடி செய்த இந்த கும்பலை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |