மொபைல் செயலியில் செய்தி படித்தால் அதற்கு பணம் கொடுப்பதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அபெக்ஸ் நிறுவனம் மொபைல் செயலியில் செய்திகளைப் படித்தால் பணம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை உண்மை என்று நம்பி தமிழகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதனால் அந்நிறுவனம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து குறிப்பிட்ட செயலி செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் குறித்த செயலியில் இருந்து பணம் தரப்படவில்லை என எனவும் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாகவும் ஈரோடு மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்.