Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி….. 14 பேர் மீட்பு…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் பொதுமக்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் உங்களுடைய கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்றும் கூறுவதால் மக்களும் அதை நம்பி  வெளிநாட்டுக்கு வேலை செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டு வேலை சிலருக்கு நன்மையாக அமைந்தாலும், பலருக்கும்  அது பாதகமாகவே அமைந்துவிடுகிறது. சமூகத்தில் கூட ஒரு பெண் வெளிநாட்டில் தன்னை பாத்ரூமில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதுபோன்ற பல்வேறு விதமான செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த பலரை சிலர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோத கும்பலால் கம்போடியாவில் கடத்தப்பட்ட 14 பேரை தற்போது மீட்டுள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதேபோன்று மியான்மர், லாவோஸ் போன்ற பகுதிகளிலும்   வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியர்களை கடத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் முகவர்கள் மீது உடனடியாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |