Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு….. நீதிமன்றத்தில் தீர்ப்பு….. வெளியான புதிய உத்தரவு….!!!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி  பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி,அன்னராஜ், தேவ சகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது தன்மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு தான் குற்றங்கள் சுமத்தப்பட்டு இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமைச்சர் செந்தில் பாலாஜியை மையமாக வைத்து தான் வழக்கு பதியப்பட்டிருப்பதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார். மேலும் வாதங்கள் அனைத்தும் தற்போது நிறைவடைந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குக்கு வருகிற திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |