தாம்பரம் அருகில் உள்ள நகை கடையில் போலியான செக் கொடுத்து ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த மூன்றுபேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தாம்பரம் சனதொரியம் ஜி எஸ் சாலையிலுள்ள பிரபலமான நகைக்கடையில் உதவி மேலாளராக பணிபுரிபவர் பார்த்திபன். சில தினங்களுக்கு முன்பு நகைக்கடையில் சார்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த பார்த்திபன், நம்மாழ்வார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் போலியான செக்கை உபயோகப்படுத்தி ரூபாய் 45 லட்சம் மதிப்பிலான நகை மோசடி செய்ததாக கூறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் வெங்கடேஷன் நம்மாழ்வார் பார்த்திபன் ஆகியோர் மோசடி செய்தது உறுதிப்படுத்தபட்டது. அதன் அடிப்படையில் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து மூவரையும் தேடி வருகின்றனர்.