Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

” மொத்தம் 25 லட்சம்”… போலி விளம்பரம் மூலம் ஏமாற்றம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி விளம்பரங்களை பயன்படுத்தி 8 கார்களை வாடைக்கு எடுத்து மோசடி செய்த இடைத்தரகர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூர் பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் காரை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் மட்டுமே வாடகை தொகையை  தந்த நிறுவனம் சில மாதங்கள் கொடுக்காததால் தர்மராஜ் காரை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் காரையும் கொடுக்காததால் தர்மராஜன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த இர்பான் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து வாடகைக்கு எடுத்த கார்களை டிராவல்ஸ் நடத்தி வரும் சேலம் மாவட்டத்திலுள்ள சின்ன திருப்பதி  பகுதியை சேர்ந்த சபரீசன் மூலம் அடமானம் வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து  இடைத்தரகர் சபரிசனை காவல் துறையினர் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 25 லட்சம் மதிப்புள்ள 8 கார்களை மீட்டுள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் 16 உரிமையாளர்களிடம் போலி விளம்பரங்களை பயன்படுத்தி ஏமாற்றி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் காவல் துறையினர் சபரிசனை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துடன் வழக்கில் தலைமறைவாக உள்ள தந்தை மற்றும் மகனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |