Categories
தேசிய செய்திகள்

“கொரோனா மருந்து” ஏழைகளுக்கு இலவசம்….. மற்றவர்களுக்கு ரூ240….. வெளியான தகவல்….!!

கொரோனா மருந்து விற்பனை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனுடைய பாதிப்பு சற்றும் குறைந்தபாடில்லை.

தற்போது இந்திய மக்கள் மட்டுமல்லாமல், உலக மக்கள் அனைவரும் இந்த நோய்க்கான தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது குறித்த ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில்,

கொரோனாவுக்கான  தடுப்பு மருந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த உடன் ஒரு டோஸ் சில்லரை வர்த்தகத்தில், ரூபாய் 140 முதல் ரூபாய் 210 வரை விலை நிர்ணிக்கப்படலாம்  என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பு மருந்தை விலை கொடுத்து வாங்க இயலாத ஏழைகளுக்கு இலவசமாக வழங்கவும் திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 

Categories

Tech |