அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி இன்று நடக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இலவச பேருந்து வசதி இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அபுதாபியின் ஷேக் ஜாயித் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சர்வதேச யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்திய தூதரான சஞ்சய் சுதிரின் தலைமையில் இன்று அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பேருந்து வசதியை, மாலை 5:00 மணியிலிருந்து 6:30 மணி வரை உபயோகித்துக்கொள்ளலாம். பேருந்துகள் அபுதாபி மாநகராட்சியினுடைய பன்னிரண்டாவது கேட் எண் மற்றும் மதினத் ஜாயித் ஷாப்பிங் சென்டர் ஆகிய இரண்டு பகுதிகளிலிருந்தும் புறப்படுகிறது.
கிரிக்கெட் மைதானத்தில் யோகாவில் கலந்து கொள்பவர்களுக்கு டீசர்ட் அளிக்கப்படுகிறது. மேலும், யோகா செய்வதற்கான விரிப்புகளும், தண்ணீரும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.