Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தேவையில்லை… அமைச்சர் விளக்கம்..!!

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தேவை இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்க அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பஸ் பாஸ் கொடுக்கவில்லை. மாணவர்கள் எவ்வாறு பஸ் பாஸ் இல்லாமல் பயணிப்பது என்று சந்தேகம் எழுந்தது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளி செல்லும் மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலே இலவசமாக பஸ்ஸில் பயணம் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன் கே.எப்.டபுள்யூ. வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பேருந்து போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பேருந்துகளும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

Categories

Tech |