ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனாவால் மூடப்பட்ட ஏழுமலையான் கோயில் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதலில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி 50,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதம்தோறும் ரூ.300 விலையில் தரிசன டிக்கெட்டுகள் அந்தந்த மாதத்திற்கு முன்பாகவே தேவஸ்தானத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கி வருகின்றனர். ஆன்லைனில் 25ஆயிரம் டிக்கெட்டுகள் ரூ.300 க்கு கவுண்டர்களில் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஒரு நாளுக்குரிய 25 ஆயிரம் டோக்கன்கள் தீர்ந்துவிட்டால் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் ஏமாற்றம் அடைவது தவிர்க்க அடுத்த நாட்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதன்படி 23 ஆம் தேதி வரையிலான டோக்கன்கள் வழங்கப்பட்டுவிட்டதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் இதை கருத்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.