விருதுநகர் மாவட்டம் ,சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண்பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிர்தா பவுன்டேசனின் நிறுவனர் உமையலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார் .
விருதுநகர், ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் பசுபதி அவர்கள் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார் .சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் மக்களுக்கு கண்பரிசோதனை செய்து ஆலோசனைகளும் வழங்கினரர்கள் .