கேம் விளையாடியதை தாய் கண்டிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த சமயத்தில், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.. இதனால் மாணவர்களுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்தனர்.. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் கேமில் மூழ்கி விடுகின்றனர்.. அதில் குறிப்பாக ஃப்ரீ பையர் (free fire) என்னும் விளையாட்டிற்கு சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி கிடக்கின்றனர்.
இதனால் மனதளவில் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.. மொபைலில் இன்ட்ரெஸ்டாக கேம் ஆடும் போது ஏதாவது சொன்னாலும் அதனை காதில் கேட்காதது போல் முழு நேரமும் அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.. பெற்றோர்கள் ஏதாவது சொன்னால் விபரீத முடிவை தேடி கொள்கின்றனர்.. இது போன்ற சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது..
அந்த வகையில், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் செல்போனில் கேம் விளையாட கூடாது என்று கூறி தாய் கண்டித்ததால் பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சஞ்சய் என்ற பாலிடெக்னிக் மாணவர் மாணவர் தொடர்ந்து ஃப்ரீ பையர் என்ற ஆன்லைன் கேமை விளையாடி வந்துள்ளார்.. இதனை தாய் தடுத்ததால் மனமுடைந்து சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. ஆகவே மாணவர்கள் இப்படி விபரீத முடிவை தேட வேண்டாம்.. பெற்றோர் நம் நல்லதுக்கு சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..