மழை நீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு உணவளித்து வரும் பிரபல சமையல் கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சமீப நாட்களாக பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து அங்குள்ள மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். தொடர் கன மழையினால், பிகார், அசாம் போன்ற மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால்,
அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட கூடிய ஒரு விஷயம் உணவு பிரச்சனைதான். இதை உணர்ந்த பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா என்பவர், பீகார் மற்றும் அசாம் மாநிலங்களை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இலவச உணவு வழங்கியுள்ளார். மேலும் பின்தங்கிய கிராமங்களில் மீட்புப் பணிகளிலும் அவர் நேரடியாக ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த செயலுக்கு பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.