தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உததரவிட்டுள்ளார்.
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை காவல் எல்லை மற்றும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி போதுமான அளவு உணவு சமைக்க வேண்டும் எனவும், முதியோர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உணவுகளை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.