உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான இன்டர்நெட் இணைப்பு கிடைக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மருத்துவம் மற்றும் வானிலை போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தற்போது மிகச் சிறப்பான முறையில் பங்காற்றுவதை காணமுடிகிறது எனக்கூறி கூறினார்.
செயற்கை நுண்ணறிவை பொறுத்தவரை ஒரு நிறுவனம் அல்லது ஒரு தேசம் மூலம் பாதுகாப்பைப் பெற முடியாது என்றும், அவற்றுக்கு உலகளாவிய கட்டமைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.