செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இன்னும் ஒரு ஆறு மாசம், ஒரு வருஷத்துக்குள்ள மக்களாகவே முடிவெடுத்து விடுவார்கள். ஒவ்வொரு தேர்தலுமே இந்த இலவசத்துக்கு சவால் தான். அடுத்த தமிழ்நாடு தேர்தல் நடக்குறதுக்கு முன்னாடியே ராஜஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்திருக்கும், தெலுங்கானா தேர்தல் நடந்து முடிந்திருக்கும், கர்நாடகா தேர்தல் நடந்து முடிந்திருக்கும்.
மக்கள் மன்றத்தில் மக்கள் எப்படி பார்க்கின்றார்கள் ? என்றும் நாம் பார்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆதரவு அனைத்து ஜாதியினருமே அர்ச்சகர் ஆகலாம். அதை பத்தி எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சி, அதற்க்கு எதிரான கருத்தை எப்போதுமே சொன்னதில்லை. இதற்கு முன்னாடி மாநிலத்தில் முருகன் இருந்தார்கள், இப்ப நான் இருக்கிறேன். நாங்க எல்லாம் தொடர்ந்து ஒரே கருத்தை சொல்கின்றேன் என கூறினார்.