Categories
மாநில செய்திகள்

இலவச மடிக்கணினி வழங்குவதில் சிக்கல்…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை, அதிகமான விலைக்கு ஒப்பந்தம் கோரப்படுவதால் மடிக்கணினி கொடுக்கப்படுவது தாமதமாகவதாக தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்நிலை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் வருடம் வரை சுமார் 44 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனினும், கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறு இணையவழியில் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு மடிக்கணினி அதிக உதவியாக இருக்கும். இதனால், விரைவில் இலவச மடிக்கணினி வழங்கப்பட வேண்டும் என்று அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் வழங்கும் மடிக்கணினிகள் குறைவான விலையில் தயாரிக்கப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக உலக அளவில் மடிக்கணினிகளின் சந்தை மதிப்பு அதிகரித்திருக்கிறது. எனவே கணினி தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் அதிகமான விலைக்கு ஒப்பந்தம் கோரியிருக்கிறது.

எனவே கொள்முதல் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாணவர்களின் நலனுக்காக இந்த பிரச்சனை முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |