மதுரையில் சாலையோர மக்களுக்கு 3 வேலையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வீடின்றி சாலையோரம் வாழ்பவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவுத் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் ஆர் பி உதயகுமார் உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார்.
அது என்னவென்றால் மதுரை திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சாலையோரம் மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் உணவின்றி தவிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு தடையின்றி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.